ETV Bharat / sitara

நான் எப்படிங்க கரெக்ட் பண்றது - மனம் திறந்த திஷா பதானி - டைகர் ஷெராஃப் படங்கள்

நடிகர் டைகர் ஷெராஃப்பை ஈர்பதற்கு இனி நான் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை என நடிகை திஷா பதானி கூறியுள்ளார்.

Disha Patani
Disha Patani
author img

By

Published : Jul 24, 2021, 12:55 PM IST

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் திஷா பதானியும், முன்னணி நடிகர்களில் ஒருவரான டைகர் ஷெராஃப்பும் சிக்கென உடலை பேணிக் காத்துவருகின்றனர். அவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஃபிட்னஸ் குறித்து தனது ரசிகர்களை உத்வேகப்படுத்தும் விதமாக, அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது போன்று புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றார்.

அதுமட்டுமில்லாது திஷா பதானி அவ்வப்போது பிகினி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்து வருகிறார். இந்நிலையில், திஷா பதானியும், டைகர் ஷெராஃபும் காதலிக்கிறார்கள் என பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், அந்த ஜோடி இதுகுறித்து வாய் திறப்பதாக இல்லை.சமீபத்தில் இணையத்தில், திஷா பதானியின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று பரவியது. அதில் திஷா பதானி டைகர் ஷெராஃப்புடான உறவு குறித்து பகிர்ந்துள்ளார்

அதில், "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நல்ல உறவு முறை உள்ளது. ஆனால் இதை தாண்டி புதிய உறவை ஏற்படுத்தும் விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் அது எந்த அளவுக்கு உறுதியானது என தெரியவில்லை".

"டைகர் ஷெராஃப் மிகவும் பொறுமையானவர். அவர் தனது செயல் அனைத்தையும் பொறுமையாகவே செய்வார். நான் அவரை ஈர்க்க முயற்சி செய்கிறேன். இதை நான் அவரிடம் சில முறை கூறியும் உள்ளேன். டைகர் நல்ல மனிதர்".

நான் அவரை ஈர்பதற்காக ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக் கொண்டேன். இதை மையமாக வைத்து படம் ஒன்றிலும் நடித்தேன். ஆனால் அவரை என்னால் ஈர்க்க முடியவில்லை. நான் இனி என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. என்றார்.

தங்களது உறவு குறித்து டைகரும் திஷாவும் நேரடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும் கூட இருவரும் தங்களது பிறந்தநாளின் போது ஒன்றாக ஏதேனும் சுற்றுலா தளத்திற்கு சென்று சிறப்பித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில், பாலிவுட் முன்னணி நடிகரும் டைகரின் தந்தையுமான ஜாக்கி ஷெராஃப் டைகர் - திஷா டேட்டிங் குறித்து கூறுகையில், எனக்கு தெரிந்து அவன் 25 வயது முதல் டேட்டிங் பண்ண தொடங்கிவிட்டான்.

திஷாவும் டைகரும் மிக நல்ல நண்பர்கள். எதிர்காலத்தை பற்றி அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திஷா - டைகர் டேட்டிங்: ஜாக்கி ஷெராஃப் சொல்வதென்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.