பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகிறது.
-
T 3453 - THEN and NOW .. तब और अब
— Amitabh Bachchan (@SrBachchan) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
बड़ी बड़ी हैरान आँखें , RANBIR की , AJOOBA के सेट पे , Shashi जी और मेरे साथ ; और अब एक मझा हुआ सशक्त RANBIR , 'ब्रहमास्त्र' के सेट पे !!
1990 to 2020 ..
"समय चलता है अपनी समय सिद्ध चाल" pic.twitter.com/RNFR89zc43
">T 3453 - THEN and NOW .. तब और अब
— Amitabh Bachchan (@SrBachchan) February 27, 2020
बड़ी बड़ी हैरान आँखें , RANBIR की , AJOOBA के सेट पे , Shashi जी और मेरे साथ ; और अब एक मझा हुआ सशक्त RANBIR , 'ब्रहमास्त्र' के सेट पे !!
1990 to 2020 ..
"समय चलता है अपनी समय सिद्ध चाल" pic.twitter.com/RNFR89zc43T 3453 - THEN and NOW .. तब और अब
— Amitabh Bachchan (@SrBachchan) February 27, 2020
बड़ी बड़ी हैरान आँखें , RANBIR की , AJOOBA के सेट पे , Shashi जी और मेरे साथ ; और अब एक मझा हुआ सशक्त RANBIR , 'ब्रहमास्त्र' के सेट पे !!
1990 to 2020 ..
"समय चलता है अपनी समय सिद्ध चाल" pic.twitter.com/RNFR89zc43
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் 'பிக் பி’ அமிதாப்பச்சன், தற்போது அதில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், அஜூபா படத்தின் படப்பிடிப்பின் போது முன்னாள் பாலிவுட் நடிகர் சஷி கபூருடன் நின்றிருந்த, குழந்தை ரன்பீர் கபூரை அமிதாப் கொஞ்சி வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 'இப்போது அப்போது' கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் 'பிரம்மாஸ்த்ரா' படப்பிடிப்பில் ரன்பீருடன் அமிதாப் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. புகைப்படம் குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், 'எனக்கு மிகவும் பிடித்த இளம் நடிகர் ரன்பீர். அவர் மகத்தான திறமையைக் கொண்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க: ‘என் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஆசைப்பட்டார்’ - இயக்குநர் பாக்யராஜ்