பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பின்பு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு அரசியல் குறித்து நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, " தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் பாலிவுட்டின் வாரிசு அரசியல் விவாதத்தில் பங்கெடுக்க நான் விரும்பவில்லை. இது பின்புலம் இருப்பவர்கள் வெளியிலிருந்து வருபவர்கள் என்பது பற்றி அல்ல. இது இன்னும் பெரிய அளவிலான விஷயம். இதற்கு ஒரே ஒரு பதில் மட்டுமே கிடையாது.
ஒரு சமூகமாக நாம் வாரிசு அரசியலுக்கு அதிக ஆதரவு கொடுத்து இருக்கிறோம். திரைத் துறையில் மட்டுமல்ல. எல்லாவற்றையும் மாற்ற வேண்டுமென்றால் நாம் அனைவரும் அதைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும்
பின்புலம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் பாலிவுட்டில் வெற்றி பெறுவது கடினம் என்றே நான் நினைக்கிறேன். வெற்றி என்பது ஒரு குடும்பத்தில் மட்டும் பிறப்பது அல்ல. இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கான விடை சொல்வது எளிதல்ல" என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
முன்னதாக ராதிகா ஆப்தே, நான் புகழுக்காக நடிக்க வரவில்லை என்றும் சௌகரியமான ஒரு விஷயத்தை மட்டுமே சார்ந்து திருப்தி அடைய மாட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
ஒரு சமூகமாக நாம் வாரிசு அரசியலுக்கு அதிக ஆதரவு கொடுத்து இருக்கிறோம் - நடிகை ராதிகா ஆப்தே - ராதிகாராதிகா ஆப்தேவின் பிறந்தநாள்
மும்பை: வாரிசு அரசியல் என்பது ஒரு பெரிய அளவிலான விஷயம் என்றும் அதற்கு ஒரே ஒரு பதில் மட்டுமே கிடையாது என்றும் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
![ஒரு சமூகமாக நாம் வாரிசு அரசியலுக்கு அதிக ஆதரவு கொடுத்து இருக்கிறோம் - நடிகை ராதிகா ஆப்தே ராதிகா ஆப்தே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:57:15:1599470835-e66ff5ac1a48508ae49b119ce74724b0-0709newsroom-1599452521-729.jpg?imwidth=3840)