ஹைதராபாத்: இயக்குநர் லவ் ரஞ்சனின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரன்பீர் கபூர், ஷ்ரதா கபூர் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். போனி கபூர், டிம்பிள் கபாடியா ஆகியோரும் உடன் இருந்தனர்.
ரன்பீர் கபூர், ஷ்ராதா கபூர் முதன்முதலாக இயக்குநர் லவ் ரஞ்சன் படத்தின் மூலம் இணைந்து பணியாற்றுகின்றனர். பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு டெல்லியில் மீண்டும் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் முதன்முறையாக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக டிம்பிள் கபாடியா நடிக்கவுள்ளார்.
ரன்பீர் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘சஞ்சு’ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அயன் முகர்ஜியின் ‘பிரம்மாஷ்திரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #20YearsOfStalwartDHILL - கனகவேல் காக்க...