கரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலகம் நாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்திவருகின்றன. இதனையடுத்து கரோனா தொற்றைத் தடுக்கும் முயற்சியில் கடுமையாக போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் சார்பில் 'ஒன் வேர்ல்ட்: டூ கெதர் அட் ஹோம்' என்ற ஆன்லைன் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 கலைஞர்களுடன் ஷாருக்கானும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் லேடி காகா, பில்லி ஜோ ஆர்ம்ஸ்ட்ராங், க்ரிஸ் மார்ட்டின், டேவிட் பெக்காம், ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பிரியங்கா சோப்ரா, டெய்லர் ஸ்ஃப்ட் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த ஆன்லைன் நிகழ்வின் மூலம் 128 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம், ஷாருக்கானுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Thank you @iamsrk for standing in solidarity with @WHO & @GlblCtzn, & for joining the One world, #TogetherAtHome programme tonight. In solidarity, we can keep the world safe! #COVID19 https://t.co/GyMtp9MoDp
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @iamsrk for standing in solidarity with @WHO & @GlblCtzn, & for joining the One world, #TogetherAtHome programme tonight. In solidarity, we can keep the world safe! #COVID19 https://t.co/GyMtp9MoDp
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 19, 2020Thank you @iamsrk for standing in solidarity with @WHO & @GlblCtzn, & for joining the One world, #TogetherAtHome programme tonight. In solidarity, we can keep the world safe! #COVID19 https://t.co/GyMtp9MoDp
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 19, 2020
இது குறித்து ட்விட்டரில் அவர், ”உலக சுகாதார நிறுவனம் - குளோபல் சிட்டிசன் அமைப்புடன் இணைந்து நடத்திய ஒன் வேர்ல்ட்: டூ கெதர் அட் ஹோம் நிகழ்வில் ஷார்ய்க்கலந்து கொண்டமைக்கு நன்றி. ஒன்றிணைந்து உலகை பாதுகாப்போம” என பதிவிட்டுள்ளார்.