’அர்ஜூன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து முடித்த ’லிகர்’ திரைப்படம், விரைவில் வெளிவர உள்ள நிலையில், பிரபல ’கல்ட்’ இயக்குநரும், சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் முன்வைத்து வருபவருமான ராம் கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டாவை வெகுவாகப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
-
Saw scenes of @KaranJohar presented #PuriJagan directed and @Charmmeofficial produced LIGER ..More than a CROSS between TIGER and LION @TheDeverakonda looks like a SUPER CROSS between @pawankalyan @urstrulyMahesh @RaviTeja_offl and @iTIGERSHROFF
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saw scenes of @KaranJohar presented #PuriJagan directed and @Charmmeofficial produced LIGER ..More than a CROSS between TIGER and LION @TheDeverakonda looks like a SUPER CROSS between @pawankalyan @urstrulyMahesh @RaviTeja_offl and @iTIGERSHROFF
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021Saw scenes of @KaranJohar presented #PuriJagan directed and @Charmmeofficial produced LIGER ..More than a CROSS between TIGER and LION @TheDeverakonda looks like a SUPER CROSS between @pawankalyan @urstrulyMahesh @RaviTeja_offl and @iTIGERSHROFF
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021
தனது ட்வீட்டில், ”பூரி ஜெகன்னாத் இயக்கி, கரண் ஜோஹர் வழங்கும் படம் ’லிகர்’. புலி, சிங்கம் ஆகியவற்றின் கலப்பு இனமான லிகர்(Lion+ Tiger)ஐத் தாண்டி, பவன் கல்யாண், மகேஷ், ரவிதேஜா, டைகர் ஷெராஃப் ஆகியோரின் அற்புதமான கலவையாக விஜய் தேவரகொண்டா தெரிகிறார்.
-
The SCREEN PRESENCE of @TheDeverakonda in LIGER Is GREATER than any STAR i have seen in the last 2 DECADES..Thank you #PuriJagan and @Charmmeofficial for bringing it out 🙏
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The SCREEN PRESENCE of @TheDeverakonda in LIGER Is GREATER than any STAR i have seen in the last 2 DECADES..Thank you #PuriJagan and @Charmmeofficial for bringing it out 🙏
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021The SCREEN PRESENCE of @TheDeverakonda in LIGER Is GREATER than any STAR i have seen in the last 2 DECADES..Thank you #PuriJagan and @Charmmeofficial for bringing it out 🙏
— Ram Gopal Varma (@RGVzoomin) July 19, 2021
நான் கடந்த இருபது ஆண்டுகளில் பார்த்த எந்த ஒரு பெரிய நடிகரையும் விட விஜய் தேவரகொண்டா திரையில் ஜொலிக்கிறார். இந்த நடிப்பை வெளிக்கொணர்ந்த பூரி ஜெகன்னாத்துக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா இப்படத்தில் பாக்ஸராக நடிக்கும் நிலையில், அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளான மே 9ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிடத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக டீசர் வெளியீடு தள்ளிப்போனது.
தொடர்ந்து, லிகர் டீசர் சரியானதொரு தருணத்தில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும், விஜய் தேவரகொண்டாவை இதுவரை யாரும் பார்க்காத புதியதொரு கதாப்பாத்திரத்தில் அனைவரும் காண்பீர்கள் எனவும் முன்னதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் டீசரை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதையும் படிங்க: தர்பார் திருவிழா: ரஜினிஃபைட் ஜப்பான் ரசிகர்கள்!