நிவின் பாலி நடிப்பில் வெளிவந்துள்ள லவ் ஆக்சன் டிராமா படத்தில் அமைந்துள்ள குடுக்கு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஓணம் பண்டிகையொட்டி பட்டிதொட்டி எங்கும் குடுக்கு பாடல் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் டெல்லியில் பாதிரியார் தேவாலயத்தில் குடுக்கு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை நிவின் பாலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் பாதிரியார் இரண்டு நபர்களுடன் சேர்ந்து குடுக்கு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். இந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
இதையும் படிங்க: பாட்டி ஆனார் கமலின் கதாநாயகி!