அமிதாப், தா்மேந்திரா, ஹேமமாலினி, சஞ்சீவ் குமார் மற்றும் அம்ஜத்கான் என மாபெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படம், ஷோலே. 1975-ஆம் ஆண்டுகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை தனதாக்கி, வரலாற்றில் இடம் பிடித்தது.
இரு திருடர்கள் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை உணர்ச்சிப்பெருக்கோடு இயக்குனா் ரமேஷ் சிப்பி படமாக்கி இருப்பார். இன்றுவரை நட்புக்கு உயர்ந்த இலக்கணம் வகுத்த படம் என்று கொண்டாடப்படுகிறது.
தர்மேந்திரா-அமிதாப் சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ரகம். ஹேமமாலினியும் தன் பங்குக்கு அழகு, நடிப்பு என தனக்கே உரித்தான பாணியில் மயக்கி இருப்பார். இந்தி, உருது ஆகிய மொழிகளில் வெளியான ஷோலே மாபெரும் வெற்றிப் படம்.
இப்படத்தில் காலியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவா் விஜூ கோட்டே. படத்தில் இவரின் கதாப்பாத்திரமும் பொிதாக பேசப்பட்டது. இவர் 300க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளார்.
1964-ஆம் ஆண்டுகளில் திரையில் தனது பங்களிப்பை அளித்து வந்தார். ஷோலே, அந்தாஸ் அப்னா அப்னா, குா்பானி, காா்ஸ், நஜீனா மற்றும் சீனா கேட் ஆகிய படங்கள் இவரது கோியரில் (வாழ்வில்) முக்கிய படங்களாக அமைந்து விட்டது.
பெரும்பாலும் ரசிகர்கள் இவரை ஷோலே, காலியா என்றே அழைத்து வந்தனா். 2018-ஆம் ஆண்டு இவரது நடிப்பில் ஜானே கியான் தே யாரோன் என்ற படம் வெளியாகி இருந்தது.
விஜூ கோட்டே சமீப காலமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் மும்பை வீட்டில் இன்று (30.09.19) காலமானார். இவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தாஸ் அப்னா அப்னா படத்தில் இவர் ஏற்று நடித்த ராபா்ட் என்ற கதாப்பாத்திரமும் பொிதும் பேசப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
'ஷோலே' காலியா காலமானார்.! - மூத்த நடிகர் விஜூ கோட்டே
மும்பை: பிரபல இந்தி நடிகர் விஜூ கோட்டே காலமானார். அவருக்கு வயது 77. இவர் ஷோலே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.