ETV Bharat / sitara

3 கோடி ஃபாலோயர்களை கடந்த வருண் தவான்! - பாலிவுட் செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

Varun Dhawan
Varun Dhawan
author img

By

Published : Jul 7, 2020, 6:37 PM IST

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானவர் வருண் தவான். அக்டோபர், பட்லாபூர் ஆகிய படங்கள் இவருக்கு நற்பெயரை வாங்கித் தந்தன. அதன்பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், வருண் தவானை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து தனது ரசிகர் உருவாக்கிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த வருண் தவான், 30 MILLION #varuniacs ... என் மீது நம்பிக்கை வந்ததற்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் அந்த வீடியோவை உருவாக்கித் தந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வருண் தவான் கடைசியாக நடித்த திரைப்படம் Coolie No 1, இதை அவரது தந்தை டேவிட் தவான் இயக்கியிருந்தார். மே மாதம் வெளியாகவிருந்த இத்திரைப்படம் கரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது.

இதையும் படிங்க: திருநங்கை கதாபாத்திர சர்ச்சை: மன்னிப்புக் கோரிய ஹாலே பெர்ரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.