ETV Bharat / sitara

ட்விங்கிள் கன்னாவுக்கு இப்படி ஒரு விசித்திரமான வியாதியா!

author img

By

Published : Jun 26, 2020, 3:55 PM IST

நடிகையும் எழுத்தாளருமான ட்விங்கிள் கன்னா தனது மகன் எடுத்த புகைப்படம் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்விங்கிள் கன்னா
ட்விங்கிள் கன்னா

பாலிவுட்டில் நடிகையாக இருந்து, பின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர், ட்விங்கிள் கன்னா. இவர் பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி ஆவார்.

இந்நிலையில் ட்விங்கிள் கன்னா, தனது மகன் ஆரவ் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த புகைப்படத்தில், ட்விங்கிள் கன்னா புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போதே, அதை தனது மார்பில் வைத்து உறங்கியுள்ளார். அவருக்கு அருகில் மகள் நிதாரா ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து ட்விங்கிள் கன்னா கூறுகையில், 'என் மகன் எடுத்த கேன்டிட்(Candid) புகைப்படம் இது. நானும் என் மகளும் ஒன்றாக புத்தகம் வாசிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், ஏதோ தெரியவில்லை, தினமும் மாலை நான்கு மணியளவில் எனது மூளை அதுவாகவே என்னை தூங்க வைத்து விடுகிறது. எனக்கு இது விசித்தரமாக இருக்கிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தை ட்விங்கிள் கன்னா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ரசிகர்களும் நெட்டிசன்களும் அதிகமாக லைக் செய்ய ஆரம்பித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.