ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 'சூர்யவன்ஷி' (Sooryavanshi). த்ரில்லர் காப் ஸ்டோரியாக (cop story) உருவாகி வரும் இத்திரைப்படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபகாலமாக த்ரில்லர் காப் ஸ்டோரிகளுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் 'சிங்கம்' திரைப்படம் அஜய் தேவ்கன் நடித்து, அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது. அதேபோல் ஜூனியர் என்டிஆரின் 'டெம்பர்' திரைப்படம் ரன்வீர் சிங் நடித்து ’சிம்பா’ என்ற பெயரில் வெளியாகி ரூ. 400 கோடி வசூல் செய்தது. இந்த இரு படங்களையும் இயக்கிய ரோஹித் ஷெட்டியின் மூன்றாவது காப் ஸ்டோரிதான் 'சூர்யவன்ஷி' (Sooryavanshi).
இதனையடுத்து, மும்பை காவல் துறையினர் இன்று மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மத்திய அமைச்சர் அனில் தேஷ்முக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
-
Team #Sooryavanshi at the Maharashtra Police International Marathon on this beautiful Sunday morning, a great initiative where the police doesn’t run after you but with you 😜 #AaRahiHaiPolice #MarathonMovement #RohitShetty @ajaydevgn pic.twitter.com/lE2KghYBND
— Akshay Kumar (@akshaykumar) February 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Team #Sooryavanshi at the Maharashtra Police International Marathon on this beautiful Sunday morning, a great initiative where the police doesn’t run after you but with you 😜 #AaRahiHaiPolice #MarathonMovement #RohitShetty @ajaydevgn pic.twitter.com/lE2KghYBND
— Akshay Kumar (@akshaykumar) February 9, 2020Team #Sooryavanshi at the Maharashtra Police International Marathon on this beautiful Sunday morning, a great initiative where the police doesn’t run after you but with you 😜 #AaRahiHaiPolice #MarathonMovement #RohitShetty @ajaydevgn pic.twitter.com/lE2KghYBND
— Akshay Kumar (@akshaykumar) February 9, 2020
பாந்த்ரா - வொர்லியில் தொடங்கிய மாரத்தான் கேட்வே ஆஃப் இந்தியாவில் முடிவடைந்தது. இதில் சுமார் 6 ஆயிரம் காவல் துறையினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூர்யவன்ஷி படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மகாராஷ்டிரா காவல்துறையினரின் இன்டர்நேஷனல் மாரத்தான் நிகழ்வில் 'சூர்யவன்ஷி' அணியினர் இடம்பெற்றுள்ளனர். இதில், காவல் துறையினர் நம் பின்னால் ஓடாமல், நம்முடன் ஓடி வரும் ஒரு உன்னத நிகழ்வு நடந்திருக்கிறது' என்று பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: