தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை பாலிவுட்டில் 2007ஆம் ஆண்டு 'பூல் புலையா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அக்ஷய் குமார், வித்யா பாலன் நடித்துள்ள இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகமாக 'பூல் புலையா 2' படம் தற்போது உருவாகிவருகிறது. இதில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனீல் பாஸ்மி இயக்கிவரும் இப்படத்தில் நடிகை தபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் 'பூல் புலையா' படத்திலிருந்து வெளியான 'மேரே தோல்னா', ‘ஹரே ராம் ஹரே ராம்’ அகிய இரண்டு பாடல்களை இப்படத்தில் ரீ-கிரியேட் செய்ய முடிவுசெய்துள்ளனர். இதில் ’மேரே தோல்னா’ பாடலுக்கு நடிகை தபு நடனமாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பூல் புலையா படத்தில் இப்பாடலுக்கு நடிகை வித்யா பாலன் நடனமாடியிருந்தார். இப்படம் மலையாளத்தில் 'மணிசித்திரத்தாலு' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேவி குறும்பட டீசர் எப்போது?- அப்டேட் வெளியிட்ட கஜோல்