ETV Bharat / sitara

' நாட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு ' - சைஃப் அலி கான் புகழாரம்!

நாட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு என்று பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் புகழாரம் சூட்டியுள்ளார்.

author img

By

Published : Jan 16, 2020, 12:59 PM IST

Jawaani Jaaneman
Jawaani Jaaneman

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தபு, அலய்யா ஃபர்னிதுரேவாலா, குப்ரா சேட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'ஜவானி ஜானிமன்'.

இந்தப்படத்தை மித்ரான், நோட்புக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதின் கக்கர் இயக்குகிறார். பூஜா என்டர்டெய்ன்மென்ட், பிளாக் நைட் பிலிம்ஸ், நார்தர்ன் லைட்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்தப்படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் நிலையில், இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சைஃப் அலி கான், அலய்யா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சைஃப் அலி கான், 'ஜவானி ஜானிமன் படம் ஒரு தந்தையின் வயது மற்றும் அவரது கடமை உள்ளிட்டவற்றைக் கூறும் கதை. இந்த சமூகத்தில் தந்தை என்ற ஒருவருக்கு அதிகப் பொறுப்பு உள்ளது. இந்தப் படத்தில் இளமையான ஒரு இளைஞரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன்’ என்றார்.

ஜவானி ஜானிமன் பாடல் வெளியீட்டு விழா

தொடர்ந்து பேசிய சைஃப் அலி கான், நடிகை தபுவின் பங்களிப்பு மற்றும் திரையுலகம் மீதான அவரது ஈடுபாட்டைப் பற்றி பாராட்டியதோடு, நாட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு என்று புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க...

குரல் பிரச்சனையால் போலீஸ் ஆவதற்கு சிரமப்படும் 'டாணா' வைபவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.