அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ள திரைப்படம் 'தப்பட்'.
இந்தப் படத்தை பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வரும் பிப்ரவரி 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை டிரெய்லரையும் வெளியிடவுள்ளது. இதற்கு முன்பு அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து டாப்ஸி நடித்த 'முல்க்' திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.
தற்போது டாப்ஸி இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சபாஷ் மித்து', 'ஹசீன் தில்ருபா' ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.
அடுத்தடுத்து வெளியாகும் டாப்ஸி பட அறிவிப்புகளால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதனிடையே நேற்று 'சபாஷ் மித்து' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.