ETV Bharat / sitara

'தப்பட்' டாப்ஸிக்கு எப்படி நன்றி சொல்வது - லட்சுமி மஞ்சு

author img

By

Published : Jul 9, 2020, 4:43 PM IST

டாப்ஸி நடிப்பில் வெளியான 'தப்பட்' திரைப்படத்தைப் பார்த்து நடிகை லட்சுமி மஞ்சு வெகுவாக பாராட்டியுள்ளார்.

டாப்சி
டாப்சி

நடிகை டாப்ஸி சமீபகாலமாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வுசெய்து நடித்துவருகிறார். அந்தவகையில் 'முல்க்' திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் 'தப்பட்'.

பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. கணவர் விக்ரம் (பவாய் குலாட்டி) தனது மனைவி அமிர்தா (டாப்ஸி பன்னு)வை அறைந்துவிடுகிறார்.

இதனால் கணவருக்கு எதிராக டாப்சி பன்னு போராடுவது போன்ற காட்சிகளுடன் படம் நகருகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாது சமூக வலைதளத்தில் பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

சமீபத்தில் 'தப்பட்' திரைப்படத்தைப் பார்த்த லட்சுமி மஞ்சு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் டாப்ஸியையும் படத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து லட்சுமி பாராட்டு கடிதம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, "இரண்டு வாரங்களுக்கு முன்பு தப்பட் படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை என்னால் எழுத இயலவில்லை. ஒரு இந்தியப் பெண்ணாக இதைச் செய்ய வேண்டும் இது செய்யக்கூடாது என்று அதிகமாக நிர்ப்பந்திக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணாக எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவை அனைத்தையும் இப்படம் என்னைக் கேள்வி கேட்க வைத்தது

'தப்பட்' படம் பார்க்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னையே அறியாமல் என்னுள் ஒரு பகுதியாக இருப்பது போலவே உணர்ந்தேன். அவை ஒவ்வொன்றும் கேட்கும் கேள்விகளை நானும் என்னுள் கேட்டுக்கொண்டிருந்தேன். படத்தைப் பார்த்து முடித்ததும், அதீத நம்பிக்கையுடனும் அதே நேரம் மன வருத்தத்துடனும் இருந்தேன்.

நான் என்னை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும், என் மீதும் என்னை சுற்றி இருப்பவர்கள் மீதும் எப்படி மரியாதை வைத்திருக்கிறேன் என்பது குறித்தும் இப்படம் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது.

இது போன்ற படங்களில் துணிச்சலுடன் நடிக்கும் டாப்ஸிக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் படத்துக்குப் பின்னால் இருக்கும் பயணத்தை நான் அறிவேன். இதை ஒரு கலையாக மாற்றியதற்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

அனுபவ் சின்ஹா கதை சொல்லலில் நீங்கள் ஒரு ஆசான். வசனங்கள் திரைக்கதை என ஒவ்வொன்றும் என்னை அசைத்தன. உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

டாப்ஸி, நீங்கள் என்னை பெருமைப்பட வைத்துவிட்டீர்கள்" என்று தெரிவித்துள்ளார். நடிகை லட்சுமி மஞ்சுவும் டாப்ஸியும் நெருங்கிய தோழிகள் என்பது தெரிந்ததே. லட்சுமி மஞ்சுவின் இந்த பாராட்டு கடிதத்திற்கு டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.