பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்குப்பின் பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் நடிகர் சேகர் சுமன், சுஷாந்த் சிங் குடும்பத்தினரை சந்திக்க பாட்னா சென்றிருந்தார். பின்னர், பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், சேகர் சுமன், சந்தீப் சிங் ஆகியோருடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து சுஷாந்த் சிங் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து சுஷாந்த் சிங் குடும்பத்தினர் கூறியதாவது, ”சேகர் சுமன், சுஷாந்த் சிங்கின் மரணத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார். சுஷாந்த் தற்கொலை விவகாரம் குறித்து மும்பையில் காவல் துறையினர் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாட்னாவில் அமர்ந்துகொண்டு இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது அரசியல் நாடகமே அன்றி வேறில்லை. இவை அனைத்தையும் கையாள எங்கள் குடும்பத்திற்கு திறன் உள்ளது.
காவல் துறையினரின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். எந்தவித அரசியல் தலையீடுகளும் எங்களுக்குத் தேவையில்லை” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:சுஷாந்த் சிங் தற்கொலை: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது பாஜக புகார்!