ETV Bharat / sitara

சன்னியின் உணவை ருசித்த ஒட்டகச்சிவிங்கி! - லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வனவிலங்கு பயிற்சி மையம்

மும்பை: பிரபல நடிகை சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டகச்சிவிங்கிக்கு உணவளிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சன்னி
சன்னி
author img

By

Published : Jun 2, 2020, 7:16 PM IST

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை சன்னி லியோன். ஹிந்தி பிக்பாஸ் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த சன்னி, கவர்ச்சியான படங்கள் மூலம் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார். இது மட்டுமின்றி பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு சன்னி லியோன் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்துவருகிறார்.

நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகமாகி உள்ளதால் சன்னி லியோன் அவரது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வனவிலங்கு பயிற்சி மையத்திற்குச் சென்ற சன்னி லியோன், அங்குள்ள ஒட்டகச்சிவிங்கி ஒன்றுக்கு உணவளிக்கும் காணொலி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "நெருக்கடிக்கு மத்தியில் வனவிலங்கு பயிற்சி மையத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அவர்களுக்கு உதவிசெய்வதில் பெருமைகொள்கிறோம். இங்குள்ள வன விலங்குகளை காப்பாளர்கள் பொறுப்புணர்வுடன் பராமரித்துவருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.