ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் : சந்தேகங்களை வலுப்படுத்தும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Aug 19, 2020, 10:00 AM IST

மும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

சுஷாந்தின் மரணம் தொடர்பாக காவல் துறையினர், சிபிஐ, அமலாக்கத் துறையினர் ஆகியோர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில் புதிய திருப்பங்களும் முன்னேற்றங்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், சுஷாந்த் சிங்கின் உடலை காவல் துறையினரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் எடுத்துச் செல்லும்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுஷாந்தின் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைகிறார். டீ சர்ட், கருப்பு கையுறை அணிந்த பெண் அங்கிருந்த இளைஞர் ஒருவரை சந்தித்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

பின் அந்த இளைஞரும் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் ஒரு கருப்பு பையுடன் அங்கிருந்து செல்கிறார். காட்சியில் இருவரது முகமும் தெளிவாக பதிவாகவில்லை.

மும்பை காவல் துறையினர் இவர்கள் இருவரையும் குறித்து எந்த ஒரு விசாரணையும் நடத்தாதது ஏன் என இப்போது கேள்வி எழும்பியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ”சுஷாந்த் மரணித்த அன்று அவர் வீட்டுக்கு எதற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வந்தது? அதேபோல் சுஷாந்த் வீட்டின் வேலைக்காரர் எதற்காகக் காணாமல் போனார்? இதற்கான விடைகள் இன்னும் கிடைக்கவில்லை" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.