25ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தொடங்கி வைத்தார்.
இதில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரையுலக பிரபலங்களான ராக்கி குல்சார், மகேஷ் பாட், குமார் ஷஹானி, ஸ்ரீஜித் முகர்ஜி, மிமி சக்ரபர்த்தி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
![Kolkata International Film Festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5010169_kiff.jpg)
மேலும், ஜெர்மனியின் ஆஸ்கர் விருது இயக்குநர் வோல்கர் ஷ்லண்டார்ஃப், நடிகர் ஆன்டி மேக்டவல், இயக்குநர் துசன் ஹனக் உள்ளிட்டோரும் திரைப்பட விழாவில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி வைக்க இருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த திரைப்பட விழாவில், 76 நாடுகளைச் சேர்ந்த 214 திரைப்படங்களும், 152 குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.
'ஹீரோ' சிவகார்த்திகேயனின் 'மால்டோ கித்தாப்புல'அர்த்தம் இதுதாங்கோ...!