ETV Bharat / sitara

மனநிலையை காக்க ட்விட்டரிலிருந்து வெளியேறிய சோனாக்ஷி

author img

By

Published : Jun 21, 2020, 2:41 PM IST

மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது மனநிலையை காப்பதற்காக ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்லார்.

சோனாக்ஷி சின்கா
சோனாக்ஷி சின்கா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலே காரணம் என சமூகவலைதள பக்கத்தில் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதுமட்டுமல்லாது சமூக வலைதள பக்கங்களில் இருக்கும் வாரிசு நடிகர் நடிகைகளின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

இதனையடுத்து நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார். கடைசியாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், நமது மன நலனை காக்க முதல்படியே எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான்.

அது இந்நாட்களில் ட்விட்டரை விட வேறு எங்கும் அதிகமாக இல்லை. நான் எனது கணக்குகளை செயலிழக்க செய்கிறேன். வருகிறேன் மக்களே என பதிவிட்டு முடித்துக்கொண்டார்.அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதற்கான வசதியையும் அவர் முடக்கியுள்ளார். தனது ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தீ பற்றி எரியட்டும் எனக்கு கவலையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.