ETV Bharat / sitara

கஜோலுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம் - ஷ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி! - தேவி படம் குறித்து ஷ்ருதிஹாசனின் கருத்து

'தேவி' படத்தில் பணியாற்றியதில் தான் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்வதாக ஷ்ருதிஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Shruti Hassan
Shruti Hassan
author img

By

Published : Mar 1, 2020, 5:56 PM IST

கஜோல், ஷ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள குறும்படம் 'தேவி'. பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ரியான் ஸ்டீபன், நிரஞ்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கைமுறையை எடுத்துரைக்கும் வகையில் உருவாகியுள்ளது. இதன் டீஸர் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷ்ருதி ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ”தேவி படத்தின் ஒரு கதாபாத்திரமாக நடித்தது மிகவும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. பெண்களுக்கு இடையிலான சக்திவாய்ந்தத பிணைப்பு குறித்து இப்படம் பேசியுள்ளது. கஜோலுடன் பணிபுரிந்தது மிகவும் அற்புதமான அனுபவம். கஜோலின் ஆற்றலும் உத்வேகமும் அதீதமானது. உங்கள் அணுகுமுறைக்கு எனது அன்பு கலந்த மரியாதை எப்போதும் உண்டு. உங்களைப் பற்றி கூறுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. பிரியங்கா பானர்ஜியின் இந்த திரைப்படம் ஒரு நல்ல கதைக்களத்தைக் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 'திரெளபதி படம் எதுக்கு எடுத்தேன்னு தெரியுமா?' - இயக்குநர் மோகன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.