உலகமெங்கும் நேற்று (ஜுன் 5) சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறிய மாற்றமே போதும்' என்று நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனது இன்ஸ்டாகிராமில், பித்தளை தண்ணீர் பாட்டில், வாளியுடன் ஒரு குவளை, ஒரு மரக்கட்டையிலான பல் துலக்கியின் புகைப்படத்தை ஷ்ரத்தா கபூர் பகிர்ந்தார். தன் வாழ்க்கை முறையில் தான் ஏற்படுத்திய மாற்றம் குறித்து, ஷ்ரத்தா கபூர் கூறுவதாக அந்தப் புகைப்படம் அமைந்திருந்தது.
அந்தப் புகைப்படத்தோடு, 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடந்த ஆண்டு முதலே கொண்டு வந்த சிறிய மாற்றங்கள். சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்' எனத் தெரிவித்திருந்தார்.