இணையத்தொடர் எடுப்பதாக கூறி இளம் பெண்கள், மாடல்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்து இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்து பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் கைது செய்து சமீபத்தில் அவரை பிணையிலும் விடுவித்திருந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நபராக கருதப்படும் நடிகை ஷெர்லின் சோப்ரா கூறுகையில், "ராஜ் குந்த்ரா, திரைப்படம் தயாரிப்பதற்காக என்னைத் தொடர்பு கொண்டார். அதற்காக நானும் இந்தாண்டு மார்ச் மாதம் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன்.
ராஜ் குந்த்ரா அவ்வப்போது என்னிடம் படத்தில் இப்படி நடிக்க வேண்டும் எனக்கூறி கிளாமர், ஃபிட்னஸ், போன்ற வீடியோக்களை காண்பிப்பார் . ஆரம்பத்தில் இது பிடித்திருந்தது. பின் அரை நிர்வாண படங்கள் காண்பிக்க ஆரம்பித்தார்.
படப்பிடிப்பின்போது, நான் ஊக்கப்படுத்தப்பட்டேன். நான் சிறப்பாக செயல்படுகிறேன் என்று அவர் கூறினார். ஷில்பா ஷெட்டி எனது புகைப்படங்கள், வீடியோக்கள், பார்த்து என் வேலையைப் பாராட்டியதாக ராஜ் குந்த்ரா கூறினார்
மூத்த நடிகை ஒருவர் என்னை பாராட்டியபோது அது எனக்கு ஒருவித உணர்வை கொடுத்தது. அப்போது எனக்கு எதும் தவறாக தெரியவில்லை. என்னை அது மேலும் சிறப்பாக வேலை செய்யவே உந்தியது. ஆபாச படம் சட்டவிரோதமானது என்று தெரிந்தபோது நான்தான் முதலில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவுக்கு சென்று புகார் தெரிவித்தேன்" என்றார்.
இந்த நிலையில், தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது அவதூறு பரப்பியதாக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை - நடிகை ஷில்பா ஷெட்டி