நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவா உடன் ‘மிஸ்டர் ரோமியோ’, விஜய்யுடன், 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 2012ஆம் ஆண்டு வியான் என்ற ஆண்குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனை ஷில்பா தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையின் கைவிரல் பிடித்த புகைப்படம் பதிவிட்டு இந்த செய்தியை தெரித்துள்ளார்.
அதில், “ஓம் ஸ்ரீ கணேஷா நம... எங்களது பிரார்த்தனையை கடவுள் கேட்டு அதிசயம் நிகழ்த்திள்ளார். எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சமீஷா ஷெட்டி குந்த்ராவின் வரவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி சமீஷாவின் பெயருக்கு அவர் அர்த்தமும் கூறியுள்ளார். சா என்ற சமஸ்கிருதத்தில் வேண்டும் என்று பொருள். மீஷா என்றால் ரஷிய மொழியில் கடவுளை போன்றவர் என்பதை குறிப்பதாகும்.
இந்தப் பெண் குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் வாசிங்க: உனக்கு உயிர்கொடுக்கும் வரை அதிசயங்கள் மீது நம்பிக்கையில்லை; மகனுக்கு ஷில்பா சொன்ன வாழ்த்து