ETV Bharat / sitara

வாக்குறுதியைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறோம் - ஷில்பா ஷெட்டி நெகிழ்ச்சி - ஷில்பா ஷெட்டி கேஸ்

நடிகை ஷில்பா ஷெட்டி தனது 12ஆம் ஆண்டு திருமண நாளையடுத்து அவரது சமூக வலைதளப்பக்கத்தில் தனது கணவருக்காக ஒரு இதயப்பூர்வமான குறிப்பை வெளியிட்டார்.

Shilpa Shetty
Shilpa Shetty
author img

By

Published : Nov 22, 2021, 1:09 PM IST

பிரபுதேவாவின் 'மிஸ்டர் ரோமியோ' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், ஷில்பா ஷெட்டி. அதைத்தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஷில்பா நடனமாடினார்.

பாலிவுட் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம்வருகிறார். ஷாருக்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு வியான், சமீஷா என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளன. அதுமட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் மிக ஆக்டிவாக ஷில்பா இருந்துவருகிறார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 22) ஷில்பா - ராஜ் குந்த்ரா தம்பதி தங்களது 12ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிவருகின்றது. இதையடுத்து ஷில்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இதே தருணத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதியைக் கொடுத்தோம். அதைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறோம். அவை - நல்ல நேர மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது, சோதனையான காலகட்டம் ஒன்றை கடப்பது, அன்பின் மீது நம்பிக்கை வைப்பது, நமக்கு கடவுள் ஒவ்வொரு நாளும் வழிகாட்டுவார் என்பன ஆகும்.

இந்த 12 ஆண்டுகள் என்பது எண்ணிக்கை மட்டும் அல்ல. இனிய திருமண நாள் வாழ்த்துகள் குக்கீ (ராஜ் குந்த்ராவின் செல்லப்பெயர்). எங்கள் திருமண வாழ்வின் மதிப்புமிக்க உடமைகள் எங்கள் குழந்தைகள். எங்களுக்கு அனைத்து காலகட்டங்களிலும் உறுதுணையாக உடனிருந்த ரசிகர்கள் அனைவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டார்.

இந்தப் பதிவையைடுத்து பிபாஷா பாசு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் ஷில்பா ஷெட்டிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.