மும்பை: ஹங்காமா 2 இசை முன்னோட்ட விழாவில் ஷில்பா ஷெட்டி உள்பட அப்படத்தின் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாலிவுட்டில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ஹங்காமா. இயக்குநர் ப்ரியதர்ஷன் இப்பத்தை இயக்கியிருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் அவர் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. இதில் ஷில்பா ஷெட்டி, மீசான் ஜாஃப்ரி, மனோஷ் ஜோசி, பிரனிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தன. இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்காக படக்குழு காத்திருக்கிறது. ஹங்காமா முதல் பாகத்தை தயாரித்த வீனஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.
மும்பையில் நடந்த இதன் இசை முன்னோட்ட விழாவில், ஷில்பா ஷெட்டி, மீசான் ஜாஃப்ரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் அனு மாலிக் தனது மகளும் எழுத்தாளருமான அன்மோல் மாலிக் உடன் கலந்துகொண்டார். கரோனா சூழல் நீடிக்கும் நிலையில், இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என கூறப்படுகிறது.