ETV Bharat / sitara

தடுப்பூசி போடுவோம்... பாதுகாப்பாக இருப்போம் - தனுஷ் பட நடிகை - கரோனா தடுப்பூசி

மும்பை: நடிகைகள் சன்யா மல்ஹோத்ரா, அமிரா தஸ்தூர் ஆகியோர் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (மே 29) எடுத்துக்கொண்டனர்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
author img

By

Published : May 29, 2021, 8:26 PM IST

இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக திரைப் பிரபலங்கள் பலர் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (மே.29) பாலிவுட் நடிகைகள் சன்யா மல்ஹோத்ரா, அமிரா தஸ்தூர் ஆகியோர் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டனர். சன்யா மல்ஹோத்ரா 'தங்கல்', 'பாதாய் ஹோ' உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். அமிரா தஸ்தூர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அனேகன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கரோனா தடுப்பூசி குறித்து அமிரா தஸ்தூர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கோவிஷீல்ட் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். இன்னும் ஒரு டோஸ் உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரின் பரிந்துரைப்படி உணவும், மருந்தும் எடுத்துக்கொண்டேன். தற்போது நலமாக உள்ளேன்.

யாரும் பயப்பட வேண்டாம். தயவு செய்து 18 - 44 வயது உட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லையென்றால், உங்கள் குடும்பத்துக்காகவும் இந்தியாவுக்காகவும் இதைச் செய்யுங்கள். தடுப்பூசிக்கான முன்பதிவை தயார் செய்துக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். நாம் வாழ்க்கையைத் தொடரத் தயாராக இருப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.