ETV Bharat / sitara

’என் கையை இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள் அப்பா’ - கலங்கும் சர்ச்சை நாயகன்! - சினிமா செய்திகள்

புகழ்பெற்ற பாலிவுட் நடிகரும் தனது தந்தையுமான சுனில் தத்தை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து, நடிகர் சஞ்சய் தத், உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்
author img

By

Published : Jun 6, 2021, 5:02 PM IST

சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் இந்தி பதிப்பான ’முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ’கல் நாயக்’ உள்ளிட்ட பிரபல படங்களில் நடித்தவர் ஆவார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி முன்னதாக ரன்பீர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சஞ்சு’ படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சஞ்சய் தத் தனது தனது தந்தை சுனில் தத்தின் 92ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூரும் விதமாக, தந்தையுடன் தான் மகிழ்ந்திருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "அனைத்து கடினமான தருணங்களிலும் எனது கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஐ லவ் யூ அப்பா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

சுனில் தத், 1950களில் பாலிவுட்டில் கோலோச்சிய புகழ்பெற்ற நடிகர் ஆவார். ’மதர் இந்தியா’, ’சுஜாதா’, ’வக்த்’, ’படோசன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சுனில் தத், பிரபல நடிகை நர்கிஸை மணந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டில், தனது 76ஆவது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, தன் மும்பை வீட்டில் மாரடைப்பால் சுனில் தத் காலமானார். அவரது பிறந்த நாள் இன்று (ஜூன்.06) கொண்டாடப்படும் நிலையில் அவரை நினைவுகூர்ந்து சஞ்சய் தத் தற்போது பதிவிட்டுள்ளார்.

இறுதியாக ஆலியா பட், ஆதித்யா ராய் கபூருடன் ’சடக்-2’ படத்தில் நடித்த சஞ்சய் தத், தற்போது பெரும் வெற்றிப்படமான ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம், ’ஷம்ஷெரா’ உள்ளிட்ட ஆக்‌ஷன் படங்களின் வெளியீட்டிற்காகக் காத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.