தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், நாக அர்ஜூனனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் சமந்தா தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அது மட்டுமல்லாது திருமணத்திற்குப் பின் சமந்தா தனது இயற்பெயரான சமந்தா ரூத் பிரபு என்ற பெயரை மாற்றி நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று பயன்படுத்தத் தொடங்கினார்.
பெயரை மாற்றிய சமந்தா
மேலும், சமந்தா, அக்கினேனி பெயரை படங்களிலும் தனது அனைத்து சமூகவலைதளப் பக்கங்களிலும் பயன்படுத்தத் தொடங்கினார். இந்நிலையில், தனது சமூவலைதளப் பக்கங்களில் சமந்தா அக்கினேனி பெயரை நீக்கி விட்டு வெறும் எஸ் (S) என்று மாற்றியுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவுக்கும் நாக சைத்தன்யாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விருது வாங்கிய சமந்தா
இந்நிலையில், சமீபத்தில் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சமந்தா நடிப்பில் வெளியான 'திஃபேமிலி மேன் 2' இணையத் தொடரின் சிறந்த நடிகைக்கான விருதை சமந்தா பெற்றார்.
அப்போது இந்த விருது குறித்து சமந்தாவிடம் நேர்காணல் ஒன்று நடைப்பெற்றது. அதில் சமந்தாவிடம் அக்கினேனியை நீக்கியதற்கான காரணமும் கேட்கப்பட்டது.
பெயர் மாற்றத்திற்கு விளக்கம் தேவையில்லை
அதற்கு பதிலளித்த சமந்தா\, ”'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் நான் நடித்தற்காக சமூகவலைதளங்களில் கேலிக்கு உள்ளானேன். இது குறித்து பல மீம்ஸ்களும் வலம் வந்தன.
அதைத் தொடர்ந்து நான் அக்கினேனி பெயரை நீக்கியதாகவும் பல வதந்திகள் பரவின. இதற்கு பதில் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் எதற்கும் எதிர்வினையாற்றும் நபர் இல்லை.
அக்கினேனி பெயரை நீக்கியதற்கு எந்த நோக்கமும் இல்லை. யாரிடமும் இதுகுறித்தான விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. எப்போதும் போன்று இப்போதும் நான் இதற்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. தற்போது ஓய்விலிருந்து வருகிறேன். அதன் பின் சில படங்களில் நடிக்கவுள்ளேன்” என்றார்.
சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்ப பெயரை நீக்கினார் சமந்தா... குழப்பத்தில் ரசிகர்கள்