'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான்-பிரபு தேவா இணைந்துள்ள படம் ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்'. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கான் படத்தைத் தயாரிக்கிறார்.
உலக முழுவதும் பரவிவரும் கரோனா தொற்று காரணமாக ஹாலிவுட்டில் உள்ள பல படங்களின் படப்பிடிப்பும், தயாரான படங்களின் வெளியீட்டுத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது சல்மான் கானின் வீட்டில் நடைபெற்று வருவதாக சல்மானின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழல் காரணமாக படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளை சல்மான் கான் வீட்டிலுருந்தே பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு ஈத் பெருநாளுக்கு திரைக்கு வர உள்ளது.