கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மும்பைக்கு அருகில் இருக்கும் பன்வேலில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.
இதனையடுத்து சல்மான் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது பெற்றோரை கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பின் சந்தித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகலில் சில மணி நேரம் தங்கியிருந்த சல்மான் இரவுக்கு முன்பே பான்வேல் பண்ணை வீட்டிற்கு திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 காரணமாக பலரும் வேலைக்குச் செல்லாமல், தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அவ்வாறு தவிக்கும் மக்களுக்கு சல்மான்கான் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை, தனது நண்பர்களுடன் இணைந்து வழங்கியுள்ளார். இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சல்மான் மும்பை வந்ததாக தெரிகின்றது.
சமீபத்தில் சல்லமான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவை இயக்கியும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது ஷபீர் அகமது எழுதிய பாடலுக்கு சல்மான் கானே பாடியும் இருந்தார்.
இதையும் படிங்க: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய சல்மான் கான்