ETV Bharat / sitara

எஸ்பிபி நலம் பெற சல்மான் கான் பிராத்தனை - எஸ் பி பாலசுப்ரமணியம் லேட்டஸ்ட் செய்திகள்

மும்பை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர வேண்டி நடிகர் சல்மான் கான் காத்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சல்மான் கான்
சல்மான் கான்
author img

By

Published : Sep 25, 2020, 8:44 AM IST

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரைத்துறை பிரபலங்கள் முதல் தமிழ்நாடு மக்கள் அனைவரும் அவர் உடல்நலம் பெற பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்பிபி மீண்டு வர வேண்டி சமூக வலைதளங்களில் #prayforspb என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்

இந்நிலையில், நடிகர் சல்மான் கான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலசுப்ரமணியம் சார் நீங்கள் விரைவில் மீண்டு வர வேண்டி என் இதயபூர்வமாக பிரார்த்தனையுடன் காத்திருக்கிறேன். எங்களுக்காக நீங்கள் பாடிய பாடல்களுக்கு நன்றி. அதிலும் குறிப்பாக dil dewana hero prem பாடல் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. லவ் யூ சார் என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.