நடிகை சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய இணைய தொடர் 'ஆர்யா'. இத்தொடர் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இத்தொடருக்காக சுஷ்மிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது நடிப்பில் வெளியான ’வான்டட்’ பட வசனத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அதில், ”ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டேனா அதை செய்து முடிப்பேன். உங்களது இந்தத் தொடரையும் ஒரு எபிசோட் பார்க்க முடிவு பண்ணி அதை முழுவதும் பார்த்துவிட்டேன். மிகவும் நன்றாக நடித்துள்ளீர்கள். வாழ்த்துகள் ஆர்யா” எனத் தெரிவித்திருந்தார்.
-
Swagat toh karo Aarya ka! What a comeback and what a show! Congratulations @thesushmitasen aur dher saara pyaar! @DisneyplusHSVIP pic.twitter.com/DSdDfpM0AA
— Salman Khan (@BeingSalmanKhan) June 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Swagat toh karo Aarya ka! What a comeback and what a show! Congratulations @thesushmitasen aur dher saara pyaar! @DisneyplusHSVIP pic.twitter.com/DSdDfpM0AA
— Salman Khan (@BeingSalmanKhan) June 27, 2020Swagat toh karo Aarya ka! What a comeback and what a show! Congratulations @thesushmitasen aur dher saara pyaar! @DisneyplusHSVIP pic.twitter.com/DSdDfpM0AA
— Salman Khan (@BeingSalmanKhan) June 27, 2020
இந்நிலையில் ஏற்கனவே சுஷாந்த் சிங் தற்கொலையால் சல்மான் கானை சாடி வந்த நெட்டிசன்கள் பலரும், இந்த ட்வீட்டிற்கு சென்று திறமைமிக்க இளைஞர்களுக்கு சல்மான் வழிவிட வேண்டும் எனக் கூறி மீண்டும் கடுமையாக சாடியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவைத் தொடர்ந்து படத்தில் சல்மான் கான், கரண் ஜோஹர், ஏக்தா கபூர் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பிகாரில் சல்மான் கான், கரண் ஜோஹர் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் முன்னதாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும்’ - நடிகர் சூர்யா அறிக்கை