ரயில்வே நடைமேடையில் பாடிக்கொண்டிருந்த ரனு மண்டலை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட, அவர் ஒரே இரவில் வைரலானார். இசையமைப்பாளர் ஹிமேஷ் ரெசாமியா தனது இசையில் பாட வாய்ப்பளித்தார். ரனு மண்டலின் குரலுக்கு ரசிக பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவருக்கு சல்மான் கான் பரிசு வழங்கியதாகச் செய்திகள் வெளியாகின.
ரனு மண்டலுக்கு சல்மான் கான், ரூ. 55 லட்சம் மதிப்புள்ள ப்ளாட், கார் ஆகியவற்றை வழங்கியதாகக் கூறப்பட்டது. இதற்கு சல்மான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சல்மான், நான் ரனு மண்டலுக்கு பரிசு வழங்கியதாகக் கூறப்படுவது பொய்யான செய்தி. அதுபற்றி நானும் கேள்விப்பட்டேன், நான் செய்யாத விஷயங்களுக்காக என்னைப் புகழ வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அவமானங்கள் தந்த வெற்றி: ஷூட்டிங் பாட்டிகளின் வரலாறு