ETV Bharat / sitara

கொரோனா வைரஸ் எதிரொலி: 'ராதே' படப்பிடிப்பை ரத்து செய்த சல்மான்கான் - தமிழ் செய்திகள்

சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் 'ராதே' படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ரத்து செய்யப்பட்டது.

Salman
Salman
author img

By

Published : Mar 8, 2020, 12:12 PM IST

'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான் - பிரபு தேவா இணைந்துள்ள படம் 'ராதே'. திஷா பதானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கான் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் பிரபுதேவா இயக்கிய ‘Wanted' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பை அக்குழுவினர் அஜர்பைஜான் பாகுவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் அச்சம் காரணமாக சல்மான் கானும் திஷா பதானியும் அஜர்பைஜான் பாகுவில் நடைபெறவிருந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து ரத்து செய்துள்ளப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய படக்குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர் ”கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்ல இப்போது மிகவும் பயமாக இருக்கறது. ஆகவே படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பில் கலந்து கொள்ள முன்கூட்டியே சென்றவர்களையும் விரைவாக திரும்பி வர அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த வருடம் ஈகைத் திருநாளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாற்று நிகழ்வை மீண்டும் கண் முன் நிறுத்திய ரன்வீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.