ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகிவருகிறது. சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்புத் தொடங்கியதை அறிவிக்கும்விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தனர்.
இது ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர். இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கின் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றியது.
-
A little surprise to our sweetest Ramaraju on our sets last night.. We hope you loved it, @alwaysramcharan. ❤️🔥 #HBDRamCharan #RRRMoviehttps://t.co/s9rqHFiqL0 #RRR @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— RRR Movie (@RRRMovie) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A little surprise to our sweetest Ramaraju on our sets last night.. We hope you loved it, @alwaysramcharan. ❤️🔥 #HBDRamCharan #RRRMoviehttps://t.co/s9rqHFiqL0 #RRR @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— RRR Movie (@RRRMovie) March 27, 2021A little surprise to our sweetest Ramaraju on our sets last night.. We hope you loved it, @alwaysramcharan. ❤️🔥 #HBDRamCharan #RRRMoviehttps://t.co/s9rqHFiqL0 #RRR @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— RRR Movie (@RRRMovie) March 27, 2021
அல்லுரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம் சரணின் கதாபாத்திர போஸ்டரை படக்குழுவினர் அவரது பிறந்தநாளான நேற்று (மார்ச் 26) வெளியிட்டனர். இந்நிலையில் இன்று (மார்ச் 27) 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் ராம் சரணின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட காணொலியைப் படக்குழுவினர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.