ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரெளத்திரம்). தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்புத் தொடங்கியதை அறிவிக்கும்விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தனர்.
இது ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கனடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு வருடப்பிறப்பான உகாதியை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.