டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான் பிறந்த நாளான இன்று, அவரது மகன் பபில் கான் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
தந்தை இர்பான், தாய் மனைவி சுதபா, சகோதரர் அயான் ஆகியோர் தனக்கு வீடியோ காலில் பேச முயற்சித்த வீடியோவை பபில் கான் பதிவிட்டிருந்தார். அதில், வீடியோ கால் துண்டிக்கப்பட்டது தெரியாமல் இர்பானும் சுபதாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இர்பான் மிஸ் யூ பபில் என்கிறார், அதைப் பார்த்து அயான் சிரித்தபடி இருக்கிறார்.
எனக்கு மிஸ் யூ சொன்னது கேட்கவில்லை என்பதை அறியாமல் இருக்கின்றனர் என்று தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்ட பபில், தனது தந்தை இர்பான் குறித்து உருக்கமான வரிகளை எழுதியுள்ளார். பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை நினைவு வைத்துக்கொண்டு கொண்டாட வேண்டும் என நினைப்பவன் நான் அல்ல... ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும். நீங்கள் (இர்பான்) இப்போது என்னுடன் இல்லை. அம்மா எப்போதும் நம் இருவர் பிறந்தநாளையும் ஞாபகப்படுத்துவார். ஆனால், உங்களின் இந்த பிறந்த நாளை நான் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">