மும்பை: ஹாலிவுட் டாப் ஹீரோக்கள் வில் ஸ்மித் , மார்டின் லாரன்ஸ் நடித்த 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்' படத்தை இந்தியாவில் வெளியிடுகிறார் பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.
பாலிவுட் ஆக்ஷன் மசாலா படங்களுக்கு பெயர்பெற்றவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோல்மால், சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இவர், தற்போது ஹாலிவுட் டாப் ஹீரோக்கள் வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடித்த 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்' படத்தின் இந்திய வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து ஜனவரி 31ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
இதனை தனது இன்ஸ்ட்கிராமில் அசத்தலான ஆக்ஷன் விடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் ரோஹித் ஷெட்டி. இதில், 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்' அதிரடி காட்சிகளும், ரோஹித் ஷெட்டி தற்போது இயக்கி வரும் 'சூர்யவன்ஷி' படத்தின் சிறிய காட்சியும் இடம்பிடித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
காரில் சாஹசம் செய்தவாறு வந்து இறங்கும் இயக்குநர் ரோஹித், 'இது வரை எனது சொந்த நாட்டு போலீஸை பார்த்துள்ளீர்கள். இப்போது எனது வெளிநாட்டு போலீஸை பார்ப்பதற்கான நேரம் இது' என்று கூறுகிறார்.
மேலும், 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்' படத்தில் இணைந்திருப்பது பெருமை. ஜனவரி 31ஆம் தேதி படம் வெளியாகிறது என்று விடியோவுக்கு கீழே பதிவிட்டுள்ளார்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படத்தை பிலால் ஃபல்லா - ஆதில் எல் ஆர்பி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகியிருக்கும் படமானது ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.