பிரபல தொலைக்காட்சி நடிகை ரிச்சா சோனி, ஜிகர் அலி சம்பானியா என்ற இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் பிப்ரவரி 11ஆம் தேதி பெங்கால் முறைப்படியும், அதே மாதம் 18ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், நெட்டிசன்கள் ரிச்சாவை தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரிச்சா, தன்னை விமர்சித்த நெட்டிசன்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், 'அடையாளத்தை மறைத்து, போலியான பெயரில் தன்னை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். ஆனால், அதில் எனக்கு பிரச்னை இல்லை. எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது.
ஒரு பெண்ணை விலை மாது என்றும், மதத்தை வைத்து திட்டுவதும் உங்களுக்கு எளிது. அது உங்களது தாய் தந்தை வளர்ப்பை காட்டுகிறது. சமூகவலைதளத்தில் உங்களது வெறுப்பை கக்கும் கமெண்டுகளால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள் என்னை திட்டுவதனால், நான் விரும்பும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கப்போவதில்லை. எனது புகைப்படத்தை பதிவு செய்துகொண்டே இருப்பேன். அதையும் மீறி உங்களுக்கு என் மீது கோபம் வந்தால் மிளகாயை எடுத்து அந்த உறுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்' என நெட்டிசன்களை வறுத்தெடுத்துள்ளார்.