ETV Bharat / sitara

ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி! - ரியாவிற்கு முன்ஜாமின் மறுப்பு

மும்பை: சிறைக்காவலில் இருக்கும் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை மும்பை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சக்ரபோர்த்தி
சக்ரபோர்த்தி
author img

By

Published : Sep 11, 2020, 9:14 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.08) கைது செய்தனர்.
கடந்த மூன்று நாள்களாக, அவரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி காணொலி அழைப்பு முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை ரியா சக்ரபோர்த்தி சார்பில், பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அவரது பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்குப் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சுஷாந்த் சிங்கிற்காக அவர் போதை மருந்துகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே மூன்று நாள்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது காவலை நீட்டிக்க விரும்பவில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதையடுத்து, ரியாவை செப்டம்பர் 22ஆம் தேதி வரை, 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மும்பையிலுள்ள பைகுல்லா பெண்கள் சிறப்பு சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
நடிகை ரியாவின் பிணை குறித்து, அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை மனு பதிவு செய்யப்பட்டது. இன்று (செப். 11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரியா சார்பாக ஆஜரான சதீஷ் மானேஷிண்டே வாதிடுகையில், சிறையில் ரியா ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் விசாரணையின்போது பெண் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு பொய்யானது என்றும் ரியாவை வேண்டுமென்றே சிலர் சிக்க வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
சிறப்பு அரசு வக்கீல் அதுல் சர்பாண்டே வாதிடுகையில், இப்போது இவர்களை வெளியே விட்டால் சாட்சியங்கள் பாதிக்கலாம் என்றும் பண பலத்துடன் சாட்சியங்களை அளிக்கலாம் என்றும் கூறினார்.
இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக உத்தரவிட்டார்.
இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் அடுத்த வாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்ய உள்ளதாக சதீஷ் மானேஷிண்டே தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.