ETV Bharat / sitara

நமது நிஜ ஹீரோக்கள் மருத்துவர்கள்... அவர்களை ஊக்கப்படுத்துங்கள் - ரவீணா டாண்டன்

author img

By

Published : Apr 25, 2020, 3:42 PM IST

கரோனா தொற்றிலிருந்து நம்மை காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த நடிகை ரவீணா டாண்டன் சமூக ஊடகப் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

Raveena Tandon
Raveena Tandon

கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக சென்ற மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. எனவே இந்த மோசமான நெருக்கடி நிலை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நாம் மருத்துவர்களின் பணியைப் பாராட்ட வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தி நடிகை ரவீணா டாண்டன் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#JeetegaIndiaJeetengeHum என்ற ஹேஷ்டேக்கின் மூலம் இந்த பரப்புரையை ரவீணா தொடங்கியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ”நமது நிஜ நாயகர்களான நமது மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்கப்படுத்த நாம் என்ன செய்ய முடியுமோ செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். அவர்கள்தான் உயிர்க்கொல்லியான கரோனா வைரஸோடு ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள். நம்மையும் நம் குடும்பங்களையும் பாதுகாப்பாக வைக்க அவர்கள் தங்கள் குடும்பங்களைக்கூட சந்திக்காமல் உள்ளனர்.

எனவேதான் எனது #JeetegaIndiaJeetengeHum என்ற பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்த மருத்துவப் பணியாளர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும். அதே சமயம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நாம் அனைவரும் இணைந்து வெளிச்சத்தை எதிர்கொள்வோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.