ஆக்சஸ் மந்த்ரா அறக்கட்டளை அமைப்பும், தேசிய காது கேளாதோர் சங்கமும் சேர்ந்து, இந்தியாவில் உள்ள வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பேசும் சைகை மொழியை இந்திய அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என மனு ஒன்றை தயார் செய்து அரசுக்கு அனுப்பவுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மனுவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கையெழுத்திடவுள்ளார். மேலும் ஸ்பிட்ஃபயர் என்ற ராப் பாடகரின் வர்தாலப் என்ற சைகை மொழி பாடல் வீடியோவை தனது சொந்த இசை நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், "எங்களின் இந்த முயற்சி மூலம், இந்தியாவின் 23ஆவது அதிகாரப்பூர்வ மொழியாக சைகை மொழியை அறிவிக்க எங்களால் முடிந்த ஆதரவைத் தருகிறோம். பலரும் இந்த முயற்சியில் இணைந்து இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஆதரவைத் திரட்ட மேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வர்தலாப் என்கிற ஸ்பிட்ஃபயரின் ஒரு சைகை மொழி வீடியோவையும் வெளியிடுகிறேன். நிறைய உரையாடல்களை இது ஆரம்பித்து வைக்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை வெற்றிப்பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட '83' படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கரோனா நெருக்கடியால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.