கரோனா தொற்று அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் அவ்வப்போது தங்களது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரன்வீர்சிங் மனைவி தீபிகா படுகோனே அவருக்கு சிகை அலங்காரம் செய்த புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அலங்காரம் அவருக்குப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”ஹேர் ஸ்டைல் பை தீபிகா படுகோனே. இந்த ஹேர் ஸ்டைல், 1961ஆம் ஆண்டு சாமுராய் திரைப்படமான யோஜிம்போவில் ஜப்பான் நடிகர் தோஷிரோ மிஃபூனின் ஹேட் ஸ்டைல் போல் உள்ளது. இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
- View this post on Instagram
Hair by: @deepikapadukone Very Mifune in ‘Yojimbo’. I like it. What do you think?
">
இந்தப் புகைப்படம் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.