இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் '83'. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கபில் தேவ்வாக ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்தாக ஜீவாவும் நடிக்கின்றனர். இதன் தமிழ் பதிப்பை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ள ரன்வீர் சிங், படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
-
#ThisIs83 @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar #SajidNadiadwala @vishinduri @ipritamofficial @RelianceEnt @FuhSePhantom @NGEMovies @vibri_media @ZeeMusicCompany @PicturesPVR @83thefilm pic.twitter.com/L0cddcbXbV
— Ranveer Singh (@RanveerOfficial) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ThisIs83 @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar #SajidNadiadwala @vishinduri @ipritamofficial @RelianceEnt @FuhSePhantom @NGEMovies @vibri_media @ZeeMusicCompany @PicturesPVR @83thefilm pic.twitter.com/L0cddcbXbV
— Ranveer Singh (@RanveerOfficial) January 25, 2020#ThisIs83 @kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar #SajidNadiadwala @vishinduri @ipritamofficial @RelianceEnt @FuhSePhantom @NGEMovies @vibri_media @ZeeMusicCompany @PicturesPVR @83thefilm pic.twitter.com/L0cddcbXbV
— Ranveer Singh (@RanveerOfficial) January 25, 2020
இதனைத்தொடர்ந்து ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் 83 பட கதாபாத்திரங்களின் பட்டியல் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. விரைவில் படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: NATRAJ SHOT - கபில் தேவுக்கு டஃப் கொடுக்கும் ரன்வீர் சிங்!