2014ஆம் ஆண்டு பிரதீப் சர்கார் இயக்கத்தில் ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘மர்தானி (Mardaani). இதில் சிறுமிகளை கடத்தும் மாஃபியா தலைவனை எதிர்க்கும் காவல்துறை கண்காணிப்பாளர் சிவாணி சிவாஜி ராய் கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடித்திருப்பார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. ராணி முகர்ஜி தனது தைரியமான நடிப்புக்காக ஸ்டார்டஸ்ட் விருதுபெற்றார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகமான ‘மர்தானி 2’ உருவாகியுள்ளது.
தற்போது இதன் டீசர் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மர்தானி’ முதலாம் பாகத்தை எழுதிய கோபி புத்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வில்லனின் கதாபாத்திரம் மிகக் கொடூரமாக இருக்கும் என கூறப்படுகிறது. பெண்களை டார்கெட் செய்யும் கொடூர சைக்கோ கதாபாத்திரத்தை ஹேண்டில் செய்யும் போலீஸாக ராணி முகர்ஜி தோன்றவிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்ய சோப்ரா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: குவெண்டின் டேரண்டினோ படத்தில் ஷாருக்கான்!