பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ரோனி க்ரூவிலா, சின்ன பட்ஜெட்டில் தொடர்ச்சியாகப் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர் தயாரிக்கும் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆணுறை பரிசோதனை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அந்த புதிய ஆணுறையின் செயல் திறனை சோதித்து சொல்ல வேண்டும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கூற, அவரும் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் தயாராகவுள்ளது.
இப்படத்தின் இயக்குநர், மற்ற கதாபாத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.