ETV Bharat / sitara

என்னை கைதுசெய்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது - ராஜ் குந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு - ராஜ் குந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு

மும்பை: ஆபாச பட விவகாரத்தில் காவல் துறையினர் தன்னை கைதுசெய்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என ராஜ் குந்த்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

f
f
author img

By

Published : Jul 23, 2021, 6:26 PM IST

ஆபாச படங்களை எடுத்து சில செயலிகளில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஜூலை 19ஆம் தேதி மும்பை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவருடன் ரியான் தோர்பே என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆபாசப் படங்களைத் தயாரித்து அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோரை ஜூலை 27ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாச பட பதிவேற்றம் விவகாரம் தொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை மேற்கொள்ளவும் சோதனை நடத்தவும் குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ஆபாச பட விவகாரத்தில் காவல் துறையினர் தன்னை கைதுசெய்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என ராஜ் குந்த்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ஆபாச படம் பதிவேற்றம்: ராஜ் குந்த்ரா கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.