மொரோக்கோ நாட்டின் மராகேஷ் நகரில் 2019ஆம் ஆண்டுக்கான மராகேஷ் திரைப்பட விழா நவம்பர் 29 முதல் இன்று வரை நடைபெறுகிறது.
இந்த திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சர்வதேச சினிமாவுக்கு அளித்துவரும் பங்களிப்பை பாராட்டி அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டுள்ள பிரியங்கா, 'கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பயணத்தை தொடங்கினேன். மராகேஷ் திரைப்பட விழாவில் இன்று இரவு அங்கீகாரம் பெற்றதில் பெருமைப்படுகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா சினிமா துறை மட்டுமல்லாது பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நல்லெண்ண தூதராக இருந்து சேவையாற்றிவருகிறார்.
-
Thank you darling you are too kind and were amazing that night. Thank you for being such an amazing champion for @UNICEF .. xoxo always https://t.co/7vr5hkdUkq
— PRIYANKA (@priyankachopra) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you darling you are too kind and were amazing that night. Thank you for being such an amazing champion for @UNICEF .. xoxo always https://t.co/7vr5hkdUkq
— PRIYANKA (@priyankachopra) December 6, 2019Thank you darling you are too kind and were amazing that night. Thank you for being such an amazing champion for @UNICEF .. xoxo always https://t.co/7vr5hkdUkq
— PRIYANKA (@priyankachopra) December 6, 2019
இதனைப் பாராட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இவருக்கு யுனிசெஃப் டெனி காயே மனிதாபிமான விருது வழங்கி கவுரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'இந்திய பெண் என்பதில் பெருமை அடைகிறேன்' - நடிகை சஞ்ஜனா கல்ராணி