நடனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் பிரபு தேவா. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த தேவி -2 திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. 'பொன் மாணிக்கவேல்', 'யங் மங் சங்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இந்திக்கு சென்ற பிரபு தேவா, சல்மான் கானை வைத்து 'டபாங் 3' படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு போக்கிரி ரீமேக்கான 'வான்டட்' படத்தில் சல்மான் கானை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இப்படம் சல்மான் கானின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக இருந்தது. எட்டு வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா -சல்மான் கான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் 'ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு பிரபு தேவா சல்மான் கானுக்கு ஜாலியாக நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோ வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவி வருதிறது. அந்த வீடியோவில், சல்மான் கான், கிச்சா சுதீப், 'டபாங் 3' படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியாட்வாலா ஆகியோர் நடனம் ஆடுகின்றனர். அப்போது பிரபு தேவா கால்களை அசைத்து மூவருக்கும் நடனம் சொல்லி கொடுக்கிறார். கலகலப்பாக நகைச்சுவையான வீடியோ ரசிகர்களை பரவலாக கவர்ந்து வருகிறது.
-
Dance class from the master himself . . @PDdancing @KicchaSudeep #WardakhanNadiadwala pic.twitter.com/fiQiNDmQEG
— Salman Khan (@BeingSalmanKhan) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dance class from the master himself . . @PDdancing @KicchaSudeep #WardakhanNadiadwala pic.twitter.com/fiQiNDmQEG
— Salman Khan (@BeingSalmanKhan) July 9, 2019Dance class from the master himself . . @PDdancing @KicchaSudeep #WardakhanNadiadwala pic.twitter.com/fiQiNDmQEG
— Salman Khan (@BeingSalmanKhan) July 9, 2019
'ஊர்வசி ஊர்வசி' பாடல் பிரபு தேவா நடிகராக அறிமுகமான காதலன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.